in

கனமழையால் மருத்துவமனையில் நோயாளிகள் பெறும் அவதி

கனமழையால் மருத்துவமனையில் நோயாளிகள் பெறும் அவதி

 

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தான் மழைக்காக ஒதுங்குவார்கள் ஆனால் இப்பொழுது நாங்கள் மழையில் நனைந்து சிகிச்சை பெற்று வருகிறோம் குற்றம் சாட்டும் நோயாளி.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மழை வருவது வழக்கமான சூழ்நிலையாக உள்ளது இந்த நிலையில் கால நிலைக்கு ஏற்றவாறு பகல் இரவு என்று மாறி மாறி வருகிறது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் திடீரென பெய்த கன மழை சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது உள் நோயாளிகள் வெளி நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவுக்கு வருவோர் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.

முழங்கால் அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் பெறும் அவதி உற்றனர். இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவமனையில் உள்ள உடைந்துள்ள பகுதிகளை சீர் செய்யாமல் நோயாளிகளை அங்கு தங்க வைத்தனர்.

உடைந்த கட்டிடத்தின் வழியாக கொட்டி தீர்த்த கனமழை அரசு மருத்துவமனையில் உள்பக்கம் ஆறு போல் வழிந்து ஓடியது அங்கிருந்த படுக்கையில் இருந்த நோயாளிகள் அவர்கள் படுக்கையை சுற்றி தண்ணீரால் மூழ்கியிருந்தது இதனைக் கண்டு கொள்ளாத மருத்துவமனை அதிகாரிகளோ உதவியாளர்களோ இதனை சரி செய்யவோ கண்டுகொள்ளவோ யாரும் முன் வரவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்.

ஒரு நோயாளி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தான் மழைக்காக ஒதுங்குவார்கள் ஆனால் நாங்களும் மழையில் நனைந்து மருத்துவம் பார்த்து வருகிறோம் இதற்கு அரசு தான் கவனம் செலுத்தி மருத்துவமனையை சரி செய்ய ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று ஒரு நோயாளி கூறுகிறார்.

What do you think?

நாகை புத்தூர் பகுதியில் பேச தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி

பாரத பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு, தருமபுரம் ஆதீன மடாதிபதி வாழ்த்து கடிதம்