in

குளிர்சாதன பேருந்தில் கொட்டும் மழை பயணிகள் அவதி

குளிர்சாதன பேருந்தில் கொட்டும் மழை பயணிகள் அவதி

 

குளிர்சாதன பேருந்தில் கொட்டும் மழை பயணிகள் அவதி, சென்னையிலிருந்து சிதம்பரம் வந்த விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட குளிர்சாதன பேருந்தின் அவல நிலை.

சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த விழுப்புரம் பணிமனைக்கு சொந்தமான குளிர்சாதன அரசு பேருந்து வந்து கொண்டிருந்தபோது மழை பெய்ததால் மழைநீர் முழுவதும் அரசு பேருந்துக்குள் கொட்டியது. இதனால் அவதிக்குள்ளான பயணிகள் அமர முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும் இந்த பேருந்தில் முன்பதிவு செய்து சிதம்பரம் வந்த அருண்குமார் என்பவர் குளிர்சாதன பேருந்துக்குள் மழை கொட்டியதை வீடியோ எடுத்து பயணிகளின் நிலைமை அரசு பேருந்தில் இப்படித்தான் உள்ளது, என வீடியோ வெளியிட்டுள்ளார்.

எனவே அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து பொதுமக்கள் பயணிக்கும் வகையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது, இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

What do you think?

சிதம்பரத்தில் திடீரென நள்ளிரவில் வட்டமிட்ட ட்ரோன்

கரு மேகங்கள் சூழ்ந்து இருண்டு காணப்படும் பாம்பன் பாலம்