காதலியை திருமணம் செய்த Pasanga ஸ்ரீராம்
கற்றது தமிழ் என்ற படத்தில் மூலம் குழந்தை நட்சத்திரமாக 2007 ஆம் ஆண்டு திரையில் அறிமுகமானவர் ஸ்ரீராம்.
இவர் பசங்க படத்தில் கிஷோருடன் நடித்தவர் பசங்க படத்தில் இவரின் கதாபாத்திரத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்து விட முடியாது வில்லத்தனமான குழந்தையாக நடித்து அனைவரையும் கவர்ந்து தேசிய விருது பெற்றவர்.
அதன் பிறகு தமிழ் படம், தீராத விளையாட்டு பிள்ளை, வேங்கை, ஜில்லா, அடுத்த சாட்டை படங்களில் நடித்தார்.
தற்பொழுது பயோ டெக் ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
திருமணமே வேண்டாம் என்று இருந்த இவரது காதலியின் மனதை மாற்றி நிகில் பிரியாவை திருமணம் செய்து இருக்கிறார்.
ஸ்ரீராம் திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.