100 டன் எடையுள்ள 45.11 அடி உயரம் கொண்ட பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்
72 லட்சம் மதிப்பில் சுமார் 100 டன் எடையுள்ள 45.11 அடி உயரம் கொண்ட பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம் மாட வீதியில் வெகு விமர்சையாக நடைபெற்றது…..

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம் மாட வீதியில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி ஏழாம் நாள் திருவிழாவில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனுறை உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மர தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

இந்நிலையில் பராசக்தி அம்மன் தேரானது முழுமையாக பிரிக்கப்பட்டு புணரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. 72 லட்சம் மதிப்பில் சுமார் 100 டன் எடையில் 48.11 அடி உயரத்தில் பராசக்தி அம்மன் தேர் புணரமைப்பு செய்யப்பட்டது. இதனை இன்று பராசக்தி அம்மன் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திரளான பக்தர்கள் வடம் பிடித்து நான்கு மாட வீதியில் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.


