in

பல்லவராயன்பேட்டை ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய திருத்தேர் திருவிழா

பல்லவராயன்பேட்டை ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய திருத்தேர் திருவிழா

 

பல்லவராயன்பேட்டை ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய திருத்தேர் திருவிழா கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த பல்லவராயன் பேட்டையில் புகழ்பெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்தின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆன திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது இதன் தொடர்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி இன்று காலை துவங்கியது.

ஸ்ரீனிவாச பெருமாள் ராஜ அலங்காரத்தில் தாயாருடன் திருத்தேருக்கு எழுந்தருளினார் அங்கு மகாதீபாரதனை செய்யப்பட்டது தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க மயிலாடுதுறை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

What do you think?

பாளையங்கோட்டையில் 12 அம்மன் சப்பரங்கள் பெற்ற நவராத்திாி தசரா திருவிழா

நாமக்கல் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் ஸ்ரீ மங்கல சண்டி மகா யாகம்