in

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல் மூட்டைகள் சேதம்

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல் மூட்டைகள் சேதம்

 

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காத காரணத்தால் நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டப்பட்டு இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம், நெல்மணிகள் முளைத்ததால் விவசாயிகள் அவதி.

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பட்டத்தில் 98 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. நிலத்தடி நீர் மற்றும் மழையை பயன்படுத்தி பெரும்பாலான விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்ட நிலையில், தற்பொழுது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வழக்கமாக செப்டம்பர் ஒன்றாம் தேதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறுவை சமயத்தில் திறக்கும் நிலையில், முன்பட்ட குருவை சாகுபடி செய்த விவசாயிகளுக்காக 90 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

கொள்முதல் நிலையங்கள் திறந்தாலும் கொள்முதல் நிலையம் ஊழியர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் கொள்முதல் நிலையங்கள் இன்னும் செயல்படவில்லை. அரசின் அறிக்கையை நம்பி விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொட்டி காத்து கிடக்கின்றனர். வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் 100 டன் அளவு கொண்ட சுமார் 5000 மூட்டை நெல் மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி காத்து கிடந்தனர்.

சமீபத்தில் பெய்த மழை நீர் நெல் கொள்முதல் நிலையத்தை சூழ்ந்து நெல்மணிகளை நனைத்ததால், மழையில் நனைந்த நெல்மணிகள் அனைத்தும் முளைக்கத் தொடங்கியுள்ளன.

இதன் காரணமாக நெல் கொள்முதல் நிலையத்தை திறந்தாலும் முளைத்த நெல்மணிகளை கொள்முதல் செய்ய மறுப்பார்கள் என்பதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குவது உடன் உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

பாஜக சார்பில் தேசியக்கொடி ஏந்தி அணிவகுப்பு மரியாதை

மூவண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்