in

சுனாமி நினைவு தினத்தில் நினைவு மண்டபத்தில் மோட்ச தீபம்

சுனாமி நினைவு தினத்தில் நினைவு மண்டபத்தில் மோட்ச தீபம்

 

கிச்சாங் குப்பம் மீனவர் கிராமத்தில் உயிரிழந்த 610 பேரின் உடலை ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உள்ள நினைவு மண்டபத்தில் மோட்ச தீபம் ஏற்றி ஏராளமான மீனவர்கள் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் கதறி அழுதனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்றவர்கள் மீன் வாங்க வந்தவர்கள் என பரபரப்பான காலைப் பொழுதில் ஆழி பேரலை கோர தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கீச்சா குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 610 மீனவர்கள் உயிரிழந்தவர்கள் உடலை ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு அங்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சிறப்பு வேள்விகள் நடத்தப்பட்டு உயிரிழந்தவரின் ஆத்மா சாந்தி அடைய மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

கடற்கரைக்குச் சென்று பாலை ஊற்றி வழிபாடு நடத்தினர். இதில் கிராமத்தைச் சேர்ந்த ஆயிரகணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று மோட்ச தீபத்திற்கு நெய் ஊற்றி பின்னர் அங்கிருந்த நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர் கதறி அழுதனர்.

What do you think?

நாகையில் 21ம் ஆண்டு சுனாமி நினைவு தின மௌன ஊர்வலம்

மலேசியா புறப்பட்டார் தளபதி விஜய்.. பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா