in

செஞ்சி தைபூசம் இரண்டாம் நாளில் முருகன் ஆலயத்தில் மழுவடித்தல் நிகழ்ச்சி

செஞ்சி தைபூசம் இரண்டாம் நாளில் முருகன் ஆலயத்தில் மழுவடித்தல் நிகழ்ச்சி

 

செஞ்சி அருகே தைபூசம் விழாவில் இரண்டாம் நாளில் முருகன் ஆலயத்தில் மழுவடித்தல் நிகழ்ச்சி விமர்ச்சியாக நடைப்பெற்றது.

தமிழகத்தில் தைபூச திருவிழாவை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் முருகன் பக்தர்கள் தீமித்தும், கொக்கி அணிந்தக்கொண்டு தேர் இழத்தும் சில இடங்களில் எண்ணையில் வடை சுடுதல் அதேபோல் மிளகாய் கரைசல் அபிஷேகம் என தங்கள் பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அனந்தபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமத் தண்டாயுதபானி சுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருவிழாவில் இரண்டாம் நாளான இன்று மழுவடித்தல் திருவிழா விமர்ச்சியாக நடைபெற்றது.

100 ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்நிகழ்வானது தைப்பூசம் திருவிழாவின் இரண்டாம் நாளில் இரும்பு தகட்டினை நெருப்பில் பழுக்கவைத்த நிலையில் அதனை பொதுமக்கள் முன்னிலையில் பூசாரி தர்மலிங்கம் வெறும் கையால் மூன்று முறை அடித்து பக்தர்களை பரசவச படித்தினார்.

அப்போது ஏராளமான பக்தர்கள் அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். மேலும் அந்த. சாம்பலை போட்டிபோட்டு கொண்டு எடுத்து சென்றனர் அதனை விளைநிலங்களில் உறமிட்டால் விளைச்சல் அதிகரிக்கும் என்பது ஐதிகம் எனக் கூறப்படுகிறது.

What do you think?

குறிஞ்சிப்பாடி அருகே எட்டு கிராம பொதுமக்கள் அகண்டம் எடுத்து வழிபடும் வினோத திருவிழா

12 ஜோதிர் லிங்கங்களில் சாமி தரிசனம் செய்யவும் பல நூறு கிலோமீட்டர் தூரம் ஸ்கேட்டிங் முறையில் பயணம் செய்யும் உத்தரப்பிரதேச மாநில இளைஞர்