in

 பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மன் பூ பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்…

 பங்குனி திருவிழாவை முன்னிட்டு அம்மன் பூ பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்…

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அம்மையநாயக்கனூரில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா,கடந்த வாரம் கொடியேத்துடன் தொடங்கியதுடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, ஒவ்வொரு நாளும் அன்னம்,ஷேசம், யானை,குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய முத்துமாரியம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்,

பத்தாம் நாளான இன்று அதிகாலை பூ பல்லக்கில் எழுந்திருளிய அம்மன் தாரை தப்பட்டை வானவேடிக்கைகள், சென்டைமேளம்,கோலாட்டம், தேவராட்டம்,உறுமி மேளம் முழங்க மக்கள் வெள்ளத்தில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்த முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்,
வழிநெடுகிலும் ஏராளமானோர் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும் தீபாராதனை செய்தும் ஓம்சக்தி பராசக்தி என கோசங்கள் எழுப்பியும் குளவையிட்டும் அம்மனை வழிபட்டனர் ……

What do you think?

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திலாசு பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தனது ஆர் எஸ் 100 யமஹா வாகனத்தில் வந்து தனது வாக்கினை பதிவு செய்தா

மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை மீண்டும் அராஜகம்!