in

தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு,விருத்தாசலத்தில் தமிழ்ச் சான்றோர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பாராட்டு விழா

தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு,விருத்தாசலத்தில் தமிழ்ச் சான்றோர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பாராட்டு விழா 

தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு,கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த எருமனூர் செல்லும் சாலையில் இயங்கி வரும், டாக்டர் E.K .சுரேஷ் கல்வி குழுமம் மற்றும் சமூக சேவை அறக்கட்டளை சார்பில்,தமிழ்ச் சான்றோர்கள் தலைமையாசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விருதை மாநகரில் சிறப்பு வாய்ந்த இந்நிகழ்ச்சியை,டாக்டர் EK.சுரேஷ் கல்வி குழும நிறுவனர் மற்றும் தலைவர் EK . சுரேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கல்வி குழும முதல்வர் சின்னப்பொண்ணு அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.கல்விக் குழும செயலாளர் இந்துமதி சுரேஷ், தலைமை செயல் அதிகாரி அருண்குமார்,புல முதன்மையர் கவி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எழுத்தாளர் பல்லவிக்குமார், நல்லாசிரியர் விருது பெற்ற ரவிச்சந்திரன்,நல்லாசிரியர் விருது பெற்ற கவிஞர் பாலமுருகன்,முனைவர் ரத்தின புகழேந்தி,பட்டிமன்ற நடுவர் முனைவர் நவஜோதி,முனைவர் கவிதை கணேசன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினர்.மற்றும் ஆசிரிய பெருமக்கள் வாழ்த்துரை வழங்கினர்.

அதன் பிறகு,தமிழ்ச்சான்றோர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வி குழும நிறுவனர் டாக்டர் EK .சுரேஷ் அவர்கள் தன்னுடைய பொற்காரங்களால்,திருவள்ளுவர் திருவுருவ சிலை மற்றும் புத்தாடைகள் வழங்கி பாராட்டி,தமிழ் சான்றோர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார்.

இந்நிகழ்ச்சியில்,டாக்டர் EK . சுரேஷ் கல்வி குழும ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்று பாராட்டு விழாவை சிறப்பித்தனர்.தமிழ் சான்றோர்களும், பத்திரிகையாளர்களும் கல்வி குழும நிறுவனர் EK .சுரேஷ் அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி அகம் மகிழ்ந்தனர்.

What do you think?

கரகாட்டக்காரன் ஜோடி ரீ-யூனியன்

பெண்களோட எண்ணிக்கை அதிகமா இருந்தா மட்டும்தான் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழல் கிடைக்கும்