கார்த்திகை தீப திருவிழாவின் முதல் நாள் வெள்ளி விமானத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதியில் உலா….
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீப திருவிழா உலக பிரசத்தி பெறறது.
திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி இன்று அதிகாலை அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அண்ணாமலையார் கருவரை முன்பாக உள்ள 63 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து விநாயகர், முருகர், அஅணணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன், பாராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்ததிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ராஜ கோபுரம் எதிரே 16 கால் மண்டபததில் வெள்ளி விமானத்தில் எழுந்தருளினர்.

இதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் ஒன்றன் பின் ஒன்றாக மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் தீப ஆராதனைகள் காண்பித்து வழிபட்டனர்.


