நாமக்கல் அம்மையப்பர் அறக்கட்டளை சார்பில் திருவெம்பாவை நோன்பு திருக்கல்யாணம் சுவாமி திருவீதி உலா ஏராளமானோர் பங்கேற்பு
நாமக்கல் நாயகி அம்மை உடனாகிய அருள்மிகு நாமக்கல் நாதர்
திருவெம்பாவை திருவாதிரை (ஆருத்ரா) திருவிழா நாமக்கல் அம்மையப்பர் அறக்கட்டளை சார்பில் திருவாதிரை நோன்பு நிகழ்வு இரண்டு நாட்கள் மிக விமர்சையாக நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்வாக வெள்ளிக்கிழமை நாமக்கல் நாமகிரி அம்மன் மண்டபம் குளக்கரையில் அம்மையப்பர் வேள்வி வழிபாடு, பேரொளி வழிபாடு, அருளாளர் அமுதம் வழங்குதல் மிக விமர்சையாக துவங்கி நடைபெற்றது.
தொடர்ந்து பவானி சிவத்திரு தியாகராஜன் அவர்களின் “கைலாய நாதனேயே காணலாம்” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது. பின்னர் சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் சிவகாமசுந்தரி அம்மை உடனூறை ஞானப்பெருங்கூத்தர், மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு திருமஞ்சனம் திருக்கல்யாண வைபவ நிகழ்வும் மிக விமர்சையாக நடைபெற்றது.
சிவத்திருமதி இரா.மல்லிகா அவர்களின் திருவாசகம் பாராயணம் நடைப்பெற்றது, அதிகாலை ஆருத்ரா தரிசனத்தை தொடர்ந்து சுவாமி திருவீதி உலா புறப்பாடு சிவகானப்பேரிகை வாத்தியங்களுடன் மிக விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான சிவனடியார்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் ஊர் பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் அம்மையப்பர் அறக்கட்டளை நிர்வாகிகள் சிவ.ஜெ.சுபத்ரா தேவி, சிவ.ஜெ.பத்மா மற்றும் திருநணா உழவாரப்பணி குழுவினர் செய்து இருந்தனர்.
