புதுச்சேரியிலும் அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் ஓம் சக்தி சேகர் வலியுறுத்தல்
தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் .. இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும் என்றும் ஓபிஎஸ் அணி அமைப்பாளர் ஓம் சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி மற்றும் உருளையன்பேட்டை தொகுதிகளில் பொதுப்பணித் துறை சார்பில் விநியோகிக்கப்பட்டு வரும் குடிநீருடன் கழிவு நீர் கலந்ததால் 40-க்கும் மேற்பட்ட மக்கள் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் சுத்தமான குடிநீர் வழங்க கோரியும், மழைக்காலம் தொடங்கவுள்ளதால் வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டுமென புதுச்சேரி அதிமுக உரிமை மீட்பு குழு சார்பில் ஓம் சக்தி சேகர் தலைமையில் பலமுறை பொதுப்பணித்துறை அமைச்சரிடமும், முதலமைச்சரிடமும் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நெல்லித்தோப்பு தொகுதியில் சுத்தமான குடிநீர் வழங்க கோரியும், உடனடியாக வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என வலியுறுத்தி அதிமுக உரிமை மீட்பு குழு சார்பில் சாரம் மார்க்கெட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்டோர் ஆளும் அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். உடனடியாக ஆளும் அரசு வாய்க்கால்களைத் தூர் வாரவில்லை என்றால் அடுத்த கட்டமாக மாநிலம் ஸ்தம்பிக்கும் அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் ..இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும் என்றும் ஓம் சக்தி சேகர் கூறினார்.


