in

ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 8-ம் ஆண்டு தேர் திருவிழா

ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 8-ம் ஆண்டு தேர் திருவிழா

 

ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 8-ம் ஆண்டு தேர் திருவிழா. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய எட்டாம் ஆண்டு தேர் திருவிழாவில் துவஜாரோஹணம் எனும் கொடியேற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக கொடிக்கு பால் தயிர் சந்தனம் பல்வேறு வகையான அபிஷேக பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர் திருவிழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் மாலை கணபதி பூஜை நடந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து கொடி மரத்திற்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மேலும் வெள்ளிக் கவசத்தில் காட்சி அளித்த மூலவர் ஸ்ரீ முத்தாலம்மன் கற்பூர ஆர்த்தி கற்பிக்கப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ முத்தாலம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் சேஷ வாகனத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது.

 

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் வரும் 25ஆம் தேதி காலை 12 மணியளவில் நடக்கிறது.

What do you think?

Discovering the Exciting World of Online Gambling Enterprise Slot Machines: Insights from a Seasoned Gamer

திண்டிவனம் இலுப்ப தோப்பு ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் ஆலய கூழாத்தல் திருவிழா