in

கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகளிடம் அதிகாரிகள் லஞ்சம்

கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகளிடம் அதிகாரிகள் லஞ்சம்

 

கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகளிடம் 5 முதல் 20 ஆயிரம் வரை அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு உள்ளது என்ற கேள்விக்கு… என்னிடம் தனியாக வந்து சொல்லுங்கள் என செய்தியாளரிடம் மழுப்பலாக பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 23 ஊராட்சிகளில் உள்ள 287 பயனாளர்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் வீடு கட்டும் திட்டத்தில் வேலை செய்வதற்கான உத்தரவு வழங்குதல் மற்றும் அரசு கட்டிடங்கள் திறப்பு, பகுதிநேர நியாய விலை கடைகள் திறப்பு, புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நத்தம் யூனியன் அலுவலகத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தலைமையில் காலை 9 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ளும் பயனாளிகள் காலை 9 மணிக்கு வரவழைக்கப்பட்டு 5 மணி நேரத்திற்கு மேலாக அமைச்சரின் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். இதில் வயதான முதியவர்கள் மற்றும் ஆண்கள் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

ஒருவழியாக 5 மணி நேரம் கழித்து வந்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி காத்திருந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்காமல் யூனியன் அலுவலகம் எதிரே இருந்த திருமண மண்டபத்தில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்களின் கூட்டத்தில் முதலில் சென்று கலந்து கொண்டார். அங்கு சுமார் அரை மணி நேரம் கலந்துரையாடல் செய்த பின்னரே பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தந்தார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது… கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகளிடம் 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என கேட்டபோது… உணவுத்துறை அமைச்சர் அளித்த பதில்…

இந்தக் கூட்டத்தில் வைத்து கேட்க வேண்டாம் என்னிடம் தனியாக சொல்லுங்கள் எங்கே என்று குறிப்பிட்டுச் சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நான் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதால் நான் சென்று வந்த பிறகு என்னிடம் தனியாக வந்து எந்த ஊராட்சி என்று குறிப்பிட்டுச் சொல்லுங்கள் நான் நடவடிக்கை எடுக்கிறேன் என மழுப்பலாக கூறிச் சென்றார்.

What do you think?

அதிமுகவோடு சேரலாம் பிரச்சனையில்லை – விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

மாணவிகளுக்கு பாலியல் சீண்டல், ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு