in

ரேஷன் அரிசி கடத்தி சென்ற சரக்கு வாகனத்தை விரட்டி பிடித்த அதிகாரிகள்

ரேஷன் அரிசி கடத்தி சென்ற சரக்கு வாகனத்தை விரட்டி பிடித்த அதிகாரிகள்

 

ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாகனத்தை பிடிக்கச் சென்ற அரசு அதிகாரிகள் மீது மோதுவது போல் வந்த சரக்கு வாகனத்தை விரட்டி பிடித்த அதிகாரிகள்:

ராமநாதபுரத்தில் இருந்து சட்டவிரோதமாக ரேஷன் அரிசி மூட்டைகளை வாகனத்தில் கடத்திச் சென்றவர்களை பிடிக்க முயன்ற போது அதிகாரிகள் மீது வாகனத்தை ஏற்றுவது போல் வந்தவர்களை ஒன்றரை கிலோ மீட்டர் விரட்டி சென்று ரேஷன் அரிசியுடன் வாகனத்தை மடக்கி பிடித்த குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் முதல் கட்ட விசாரணைக்கு பின் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் நகர் பகுதிகளான சின்ன கடை, கேணிக்கரை, செட்டியார் தெரு உள்ளிட்ட பகுதியிலிருந்து அடிக்கடி ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக வாகனத்தில் கடத்திச் செல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை கேணிக்கரை ஜங்ஷன் வழியாக சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை தாசில்தார் தமீம் மற்றும் ஆர் ஐ முத்துராமலிங்கம் ஆகிய இருவரும் அப்பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற போது அதிகாரிகளை கண்டதும் தப்பிபதற்காக அதிகாரிகள் இருவர் மீதும் சரக்கு வாகனத்தை ஏற்றுவது போல் வந்து தப்பி சென்றுள்ளனர்.

இதனால் சுதாரித்து கொண்ட அதிகாரிகள்இருவரும் இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் விரட்டிச் சென்று செட்டியார் தெரு பகுதியில் வாகனத்தை மடக்கி பிடித்தனர்.

அப்போது வாகனத்தை ஒட்டி வந்த ஒட்டுநர் வீகனத்தை விட்டு தப்பி ஓடிய நிலையில் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 50 மூட்டைகளில் சுமார் 2500 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ரேஷன் அரிசி வாகனத்துடன் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் வாகனத்தில் இருந்த சிறார் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

மோகன்லால் பதவி விலகியதால், ஜெகதீஷ், ஸ்வேதா மேனன் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்

பிக்க் பாஸ் சீசன் 9 விரைவில் ….