சீனியர் நடிகைகளுக்கு மரியாதையே கொடுப்பதில்லை..
சீரியல் நடிகை தேவி பிரியா இந்த கால நடிகைகள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
எங்க காலத்தில் பட வாய்ப்புகளை பெறுவதே அரிதாக இருக்கும் அதனால வர சான்ஸ்..சை மிஸ் பண்ண மாட்டோம். ஆனால் இப்பொழுது எல்லாம் அப்படி இல்லை எல்லோருக்கும் வாய்ப்பு ஈசியாக கிடைத்து விடுகிறது.
அந்த காலத்தில் ஒரு நாளைக்கு 13 ஷாட் …ல நாங்கள் நடிப்போம் எல்லாத்துக்கும் டயலாக் பேப்பர் இருக்கும் படித்துவிட்டு தான் நடிப்போம். ஆனால் இப்பொழுது உதவி இயக்குனர்கள் சீனை பற்றி சொன்னால் கூட அதை காதில் வாங்காமல் நேரா ஷாட்..டுக்கு போகலாம் என்று நடித்து விட்டு போனை நோண்டி…இட்டு இருபாங்க.
அப்படி நடிப்பவர்களுக்கும் எங்களுக்கும் அதே சம்பளம் தான் பல வருடங்களாக இந்த துறையில் இருப்பதால் தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் நண்பர்களாக பார்க்கிறோம்.
அதனால் கறாராக சம்பளத்தை கேட்டு வாங்க முடியவில்லை. சான்ஸ் கிடைக்கும் போது தான் நடிக்க முடியும். ஆனால் இப்போ இருக்கிற சீரியல் நடிகைகள் சீனியர் நடிகைகளுக்கு மரியாதை கூட கொடுப்பதில்லை என்று வருத்தத்துடன் நடிகை தேவி பிரியா கூறியுள்ளார்.


