அதிமுகவோடு சேரலாம் பிரச்சனையில்லை – விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
அதிமுகவோடு சேரலாம் பிரச்சனையில்லை- ஆனால் பாஜகவோடு இருப்பதால் அது முடியாது என மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு.
மதுரை ஆனையூர் அருகே உள்ள முடக்கத்தான் பகுதியில் விசிக விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த மறைந்த பாண்டியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீர அஞ்சலி செலுத்திய விசிக தலைவர் திருமாவளவன் மேடையில் பேசியதாவது
ஆளுங்க கட்சியோடு நாம் கூட்டணியில் இருக்கிறோம். ஆனாலும் நமது கொடியை அகற்றி வருகின்றனர்.
இத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டு சமாளித்துக் கொண்டு போராடிக் கொண்டு இன்னும் ஆளுங்கட்சி கூட்டணியில் தான் நாம் நீடிக்கிறோம்.
ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்க வேண்டும் என கேட்பது சராசரி மனிதனின் புத்தி. அது அரசியலில் சரிவராது.
அரசியலில் நாம் இருக்கும்போது எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு தான் நாம் இருக்க வேண்டும். ஒரு பிரச்சனையை கவனத்தில் கொண்டு மட்டும் நாம் செயல்பட முடியாது. அரசியலில் தெளிவு, பொறுமை, நிதானம் தேவை.
நமக்கு ஆதரவான சக்திகள் யார்? நமக்கு எதிரான சத்திகள் யார் என்பதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.
அதனால் தான் பாஜக பாமக கட்சிகள் இடம்பெறும் அணிகளில் நாம் சேர மாட்டோம் என தெளிவாக முடிவெடுத்துள்ளோம்.
அதிமுகவோடு சேர்வீர்களா? சேரலாம் பிரச்சனை இல்லை. ஆனால் அதிமுக பாஜகவோடு இருப்பதால் அது முடியாது. என மேடையில் பரபரப்பாக பேசினார்.
தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்ட சென்றார்.