in

கொள்ளிடம் ப்ரத்யங்கராதேவி ஆலயத்தில் 100 கிலோ மிளகாயை கொண்டு நிகும்பலா யாகம்

கொள்ளிடம் ப்ரத்யங்கராதேவி ஆலயத்தில் 100 கிலோ மிளகாயை கொண்டு நிகும்பலா யாகம்

 

சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு கொள்ளிடம் ப்ரத்யங்கராதேவி ஆலயத்தில் 100 கிலோ மிளகாயை கொண்டு நடத்தப்பட்ட நிகும்பலா யாகம், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கோபாலசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட சாமியம் கிராமத்தில் பழமை வாய்ந்த ப்ரத்யங்கராதேவி
ஆலயம் அமைந்துள்ளது.

ஆலயத்தில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு நிகும்பலா யாகம் நடைபெற்றது.நவகிரக ஹோமம், கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது.

தொடர்ந்து பக்தர்கள் அளித்த 100 கிலோ மிளகாயை யாகத்தில் இட்டு வேத விற்பனர்கள் மந்திரம் ஓத நிகும்பலா யாகம் நடைபெற்றது.

இதனை அடுத்து மகாபூர்ணாகுதி செய்யப்பட்டு, பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு செய்யப்பட்டு ஆலயத்தை சுற்றி வலம் வந்து தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி திருக்கோவில் நூறாவது அமாவாசையை கேக் வெட்டி சிறப்பு பூஜைகள்