in

2 பள்ளிகள், கிறிஸ்துவ ஆலயம், மசூதி நடுவில் புதிய டாஸ்மாக் கடை : பொதுமக்கள் போராட்டம்

2 பள்ளிகள், கிறிஸ்துவ ஆலயம், மசூதி நடுவில் புதிய டாஸ்மாக் கடை : பொதுமக்கள் போராட்டம்

கோயம்பேடு அருகே இரண்டு பள்ளிகள், கிறிஸ்தவ ஆலயம், மசூதி மற்றும் பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை எதிர்த்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கோயம்பேடு – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெற்குன்றம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திடீரென்று திறக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என்றும் உடனே அதனை மூட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பகுதி அதிமுக கவுன்சிலர் சத்தியநாதன் மக்களுடன் இணைந்து டாஸ்மாக் கடைக்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அப்பகுதி மக்களிடம் புகார் மனுவை பெற்று அதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்களின் கையெழுத்துக்களை பெற்று டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என போலீசாரிடம் மனு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவுன்சிலர் சத்தியநாதன், கடந்த நான்கு வருடமாக தங்கள் பகுதியில் திறக்கவிருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளை மக்களை திரட்டி போராட்டம் செய்து திறக்க விடாமல் தடுத்து விட்டதாக கூறினார்.

அதுமட்டுமின்றி தற்போது திறக்கப்பட்டிருக்கும் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிராக கடந்த ஏழு மாதங்களாக பல்வேறு இடங்களில் மனு கொடுத்து அனுமதி பெற முடியாத வகையில் செய்திருந்ததாகவும், அதையும் மீறி நேற்று திடீரென்று அனுமதி வழங்கப்பட்டு ஒரே நாளில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

ஒருபுறம் அரசு பள்ளி மறுபுறம் தனியார் பள்ளி என்றும், மற்ற இரண்டு புறங்களில் கிறிஸ்தவ ஆலயம் மற்றும் மசூதி இருக்கும் நிலையில் எப்படி டாஸ்மாக் கடை திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.பேருந்து நிலையத்தில் அருகே டாஸ்மாக் கடை திறந்து இருப்பதால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என கேள்வி எழுப்பிய அவர், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் இடங்களில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்ற அரசு கொள்கை என்ன ஆனது என்றும் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

படிப்படியாக மது கடைகளை குறைப்பதாக கூறிய அரசு தற்போது தேர்தல் நேரத்தில் புதிய மதுக்கடையை திறந்து இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் டாஸ்மாக் கடையை மூடும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்துக் கொண்டார்.

What do you think?

பூந்தமல்லியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Aviator – игра, которая поднимает настроение