புதிய பேருந்து சேவை தொடக்க விழா
மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் புதிய பேருந்தை தானே இயக்கி சென்றார் பேருந்தில் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்
மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் ஊராட்சி வடக்குவெளி கிராமம்,குமாரமங்கலம் மற்றும் தியாகராஜபுரம் ஆகிய பகுதிகளுக்கு புதிய வழித்தட பேருந்து சேவையை தொடக்க விழா நடைபெற்றது.

இதில் புதிய அரசு பேருந்து சேவையை தொடங்கி வைத்த மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் அந்த புதிய பேருந்து தானே இயக்கி சென்றார்.
பேருந்தை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஓட்டி சென்ற போது பேருந்தில் இருந்தவர்களும் வழியில் நின்றவர்களும் அதனை பார்த்து ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர் பேருந்தை சேவையை துவக்கி வைத்து தானே பேருந்து ஓட்டி சென்ற மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் அவருக்கு பலரும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர் இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

