தலைகீழாக தொங்கியபடி ரூபிக்ஸ் கியூப் தீர்க்கும் ( கன சதுரங்க விளையாட்டு ) போட்டியில் அமெரிக்க கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நெல்லை மாணவனுக்கு குவியும் பாராட்டுக்கள் குறித்த செய்தி..
நெல்லை டவுண் அடுத்த காந்திநகர் பகுதியில் ரஹமத் நிஷா பேகம் என்பவர் ஸ்டார் கோச்சிங் சென்டர் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளாக ரூபி க்யூப்ஸ் எனும் கனசதுரங்க விளையாட்டு போட்டி உத்திகளை கற்றுக் கொடுத்து வருகிறார். 30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் ரூபி க்யூப் தீர்வு குறித்து தற்போது பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் ரூபி கீயூப்ஸ் தீர்வுக்கான கனசதுரங்க விளையாட்டுப் போட்டியில் கின்னஸ் சாதனைக்கான 2×2 க்யூப்ஸை தலைகீழாக தொங்கியபடி மாணவன் அகில் இப்சான், 2.1 வினாடிகளில் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு மலேசியாவில் சிறுமி ஒருவர் தலைகீழாக தொங்கியபடி நான்கு வினாடிகளில் செய்த சாதனையை முறியடித்ததால், நெல்லையைச் சேர்ந்த 12 வயதான, 7 ம் வகுப்பு மாணவன் அகில் இப்சான் அமெரிக்க நாட்டின் கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இதே பயிற்சி மையத்தில் படித்த 10 மாணவிகள் பத்து நொடிகளுக்குள்
2 × 2 கியூபை தீர்வு கண்டு உலக சாதனை படைத்துள்ளனர். இதற்காக நெல்லை டவுணில் உள்ள ரூபி க்யூப் கன சதுரங்க விளையாட்டு போட்டி பயிற்சி மையத்தில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற சாதனை படைத்த மாணவன் அகில் இப்ஸான் மற்றும் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்த மாணவிகளுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது இதில் கலந்து கொண்ட உறவினர்கள் பயிற்சியாளர்கள் மாணவ மாணவிகளை வாழ்த்தினர்.
( கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மாணவன் அகில் இப்சான் பேட்டி, முன்னதாக பயிற்சி எடுக்கும் காட்சியும், கின்னஸ் சாதனைக்காக தலைகீழாக தொங்கியபடி கனசதுரங்கத்தை தீர்வு கண்ட காணொளியும், பயிற்சி அளித்த ரஹமத் நிஷா பேகம் பேட்டியும் உள்ளது )