in

நெல்லை மாவட்டம் களக்காடு செக்கடி சுடலை மாடசாமி திருக்கோவில் திருவிழா

நெல்லை மாவட்டம் களக்காடு செக்கடி சுடலை மாடசாமி திருக்கோவில் திருவிழா

 

நெல்லை மாவட்டம் களக்காடு செக்கடி சுடலை மாடசாமி திருக்கோவில் திருவிழா கோலாகலம் களக்காடு நதியில் இருந்து மேளதாளம் முழங்க சுவாமிக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் களக்காட்டில் பிரசித்தி பெற்ற செக்கடி சுடலை மாடசாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் நடைபெறும் வைகாசி திருவிழா வெகு விமர்சனம் மூன்று நாட்கள் நடைபெற இந்த திருவிழாவில் முதல் நாளான இன்று களக்காடு நதியிலிருந்து சுவாமிக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்காக களக்காடு நதி கரையில் அமைந்துள்ள ஆதி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுடலைமாடசாமி முகம் வைத்து அலங்கரிக்கப்பட்ட கலசத்தை கோவில் பூசாரி தலையில் சுமந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

மேளதாளம் முழங்க கோவிலுக்கு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தீர்க்கக் குடம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

சிங்கவரம் அரங்கநாதர் கோயில் பிரம்மோற்சவ விழா

141 மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணி