in

அருள்மிகு கபாலீஸ்வரி அம்மன் திருக்கோவில் நவராத்திரி திருவிழா ஆரம்பம் 

அருள்மிகு கபாலீஸ்வரி அம்மன் திருக்கோவில் நவராத்திரி திருவிழா ஆரம்பம் 

 

அருள்மிகு கபாலீஸ்வரி அம்மன் திருக்கோவில் 123 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா பந்தல்கால் நடும் நிகழ்வோடு கோலாகலமாக ஆரம்பம்.

மதுரை மாடக்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரி அம்மன் கோவில் 123 ஆம் ஆண்டு நவராத்திரி திருவிழா வரும் 22 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்க உள்ள நிலையில்.

இன்று கோவில் முன்பு பந்தல்கால் என்று சொல்லக்கூடிய முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.

வர்ணம் பூசப்பட்ட மூங்கில் கம்புகளில் மாவிலை வேப்பிலை தோரணங்கள் கட்டப்பட்ட நிலையில் கோவில் பூசாரி விசேஷ பூஜைகள் செய்த பிறகு கிராமப் பெரியோர்களும் அறியாதரர்களும் கலந்து கொண்ட நிலையில் கோவில் முன்பு பந்தல்கால் நடும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

பந்தல்கால் நடப்பட்ட பிறகு மஞ்சள் நீர் மற்றும் பால் உள்ளிட்டவைகள் ஊற்றப்பட்ட பிறகு தேங்காய் பழம் ஊதுபத்தி வைத்து தீபாராதனையோடு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பந்தல்கால் நடப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து வரும் 22ஆம் தேதி முதல் அருள்மிகு ஸ்ரீ கபாலீஸ்வரி அம்மன் விசேஷ அலங்காரத்தில் ஒவ்வொரு நாளும் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ள நிலையில்.

சிகர நிகழ்வாக இரண்டாம் தேதி அம்மன் நள்ளிரவில் வீதி உலா வருவது வழக்கம்.

அம்மன் வீதி உலா வரும்போது மாடக்குளம் கிராமம் முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் அம்மனை வரவேற்கும் வண்ணமாகவும் மேளதாளங்கள் முழங்க மாவிளக்கு தேங்காய் பழம் உள்ளிட்டவைகளை அம்மனுக்கு படைத்து வணங்குவர்.

தன் மக்களை பார்க்க அவர்களை தேடியே அம்மன் வீதி உலா வருவது விசேஷமான ஒன்று அந்த நிலையில் இரவிலே புறப்பாடாகி அதிகாலை வரை மாடக்குளம் கிராமப் பகுதி முழுவதும் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கக் கூடிய ஒரு கோலாகலமான நிகழ்வின் 123 ஆம் ஆண்டு நவராத்திரி உற்சவ விழா இன்று பந்தல்கால் நடும் நிகழ்வோடு இனிதே தொடங்கியது.

What do you think?

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பாமக தலைவர் அன்புமணி சாமி தரிசனம்

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் புரட்டாசி மாத ஜோதி தரிசனம்