மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா
நாமக்கல் பரமத்தி வேலூர் காவேரி சாலையில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாளினை முன்னிட்டு மகா சண்டியாகம் சிறப்பாக நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவேரி சாலையில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழாவின் இறுதி நாளினை முன்னிட்டு ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு மகா சண்டியாகம் நடைபெற்றது.
விழாவின் நிகழ்வாக ஆலயத்தில் கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு உற்சவர் மகா மாரியம்மன் கொழுவிறுக்க செய்து யாக குண்டம் அமைக்கப்பட்டு யாக வேள்விகள் நடைபெற்றது.
வேள்வியில் 14 வகையான பூர்ணா குதிகள் சமர்ப்பிக்கப்பட்டு பட்டுப் புடவையுடன் மங்களப் பொருட்கள் மற்றும் வெள்ளி கொலுசு தங்க மாங்கல்யம் ஆகியவை கள் சமர்ப்பிக்கப்பட்டது. இறுதியாக மகாபூர்ணாகதி சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மூலவர் மகா மாரியம்மனுக்கு பலவகை வாசனை திரவியங்களினால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு இறுதியில் கலசபிஷேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து மூலவர் மகா மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தீர்த்தம் தெளிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.


