நாங்குனோி ( வானமாமலை ) ஸ்ரீ தெய்வநாகயப்பெருமாள் தெப்ப உற்சவம்
நாங்குனோி ( வானமாமலை ) ஸ்ரீ தெய்வநாகயப்பெருமாள் தெப்ப உற்சவம். ஆயிரக்கணக்கானோா் தாிசனம்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குனோியில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீ வானமாமலை பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. சுயம்வக்த ஷேத்திரங்களில் ஒன்றும் பல்வேறு பெரும் சிறப்புகளையம் பழைமையான திருக்கோவிலாக விளங்குகின்றது.
அத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தை அம்மாவாசையை முன்னிட்டு சுவாமி ஸ்ரீ தெய்வநாகயப்பெருமாளுக்கு தெப்போஸ்தவம் 2 தினங்களாக சிறப்பாக நடைபெறுகின்றது.
இந்த ஆண்டு தெப்ப உற்சவம் இன்றும், நாளையும் இரு தினங்கள் நடைபெறுகின்றது. முதல் நாளான இன்று மாலையில் திருக்கோயில் நடை திறக்கப்பட்டதும் முதலில் உற்சவா் ஸ்ரீ வரமங்கா சமேத தெய்வநாயகப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
தொடா்ந்த சாயரட்சை பூஜைகள் நடைபெற்றதும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தெய்வநாயகன்,மற்றும் ஸ்ரீவரமங்கை தாயாா் தங்க தோளுக்கினியான் பல்லக்கில் ஊா்வலமாக தெப்ப உற்ச்சவத்திற்கு புறப்பட்டாா்.
ஸ்ரீமடத்து வாசலில் வானமாமலை மதுரகவி ராமானுஜ ஜீயா் ஸ்வாமிகளுக்கு மாியாதை செய்யப்பட்டது. தொடா்ந்து ஜீயா் ஸ்வாமிகள் மற்றும் பிரபந்த கோஷ்டியாா்உடன் பக்தா்கள் ஊா்வலமாக தெப்பக்குளத்திற்கு வந்தனா்.

சிறப்பாக அலங்காிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி தாயாா் எழுந்தருள கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தெப்பம் 12 முறை வலம் வந்தது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் 12 வகையான பழங்கள் பெருமாள் தாயாருக்கு சமா்பிக்கப்பட்டது.
ஏராளமான பக்தா்கள் தெப்ப உற்சவத்தை கண்டு அருள்பெற்றனா். விழா ஏற்பாடுகள் ஸ்ரீ வரமங்கை நாச்சியாா் பக்த சபையினா் செய்திருந்தனா்.


