மீண்டும் ஒளிபரப்பாகும் நந்தினி சீரியல்
சன் டிவியில் எத்தனை புது சீரியல் ஒளிபரப்பப்பட்டாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஒரு சில சீரியல்கள் இருக்கின்றது.
தற்பொழுது மீண்டும் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் 2017 ஆம் ஆண்டு தொடங்க பட்ட நந்தினி 2020 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து முடியும் வரை ரசிகர்களின் பேராதரவை பெற்றது.
ரத்னவேல் (ரியாஸ் கான்) என்ற மனிதன், ஒரு மர்மமான வடிவத்தை மாற்றும் பார்வதியை (குஷ்பு) காதலிப்பதோடு, அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதிலிருந்து தொடங்குகிறது கதை.
நந்தினி மற்றும் கங்கா என்ற இரண்டு இரட்டை மகள்கள் அவர்ளுக்குப் பிறக்க. கங்கா மனித குணங்களைப் பெற்றார், அதே நேரத்தில் நந்தினி பாம்பு குணங்களைப் பெற்றார்.
விறுவிறுப்பான கதை கலத்தை கொண்ட நந்தினி அவ்னி டெலிமீடியாவின் கீழ் சுந்தர் சி அவர்களால் தயாரிக்கப்பட்டது.
கொரோனா காலத்தில் மீண்டும் இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது, நித்யா ராம், ராகுல் ரவி உள்ளிட்டோர் நடித்த நந்தினி சீரியல் மீண்டும் வரும் திங்கள் முதல் காலை 9 மணி முதல் 11 மணி வரை சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.