in

நாமக்கல் பரமத்தி வேலூர் ஐயப்ப சுவாமி அபிஷேக ஆராதனை

நாமக்கல் பரமத்தி வேலூர் ஐயப்ப சுவாமி அபிஷேக ஆராதனை

 

நாமக்கல் பரமத்தி வேலூர் ஐயப்ப சுவாமி ஆலயத்தில் மார்கழி மாத உத்திரம் நட்சத்திரத்தை முன்னிட்டு அபிஷேக ஆராதனை.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் செட்டியார் தெரு நேரடி வீதியில் உள்ள பழமையான ஸ்ரீ பால ஐயப்ப சுவாமி ஆலயத்தில் மார்கழி மாத உத்திரம் நட்சத்திரத்தினை முன்னிட்டு பால ஐயப்ப சுவாமிக்கு பால், தயிர், திருமஞ்சனம், அரிசி மாவு, மஞ்சள், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் போன்ற பலவகை வாசனை திரவியங்களினால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு ராஜ அலங்காரம் செய்து சோடச உபசாரத்துடன் பஞ்சாரத்தி அடுக்கரத்தி ஏகாரத்தி உடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தீர்த்த பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

What do you think?

நாமக்கல் மோகனூர் பகவதியம்மன் ஆலயத்தில் மார்கழிமாத உத்திர நட்சத்திர விழா 

புதியமாவட்ட செயலாளர் வீர திராவிட மணி நியமனம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை