in

நாமக்கல் மோகனூர் பகவதியம்மன் ஆலய மார்கழி திருவிழா -மஞ்சள் நீராட்டு திருவீதி விழா

நாமக்கல் மோகனூர் பகவதியம்மன் ஆலய மார்கழி திருவிழா -மஞ்சள் நீராட்டு திருவீதி விழா 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகவதியம்மன்ஆலயத்தில் மார்கழி திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவுமஞ்சள் நீராட்டு திருவீதி விழா உடன் நிறைவு பெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கிய அருள்மிகு பகவதி அம்மன் ஆலய திருவிழா தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன விழாவின் கடைசி நிகழ்வான நேற்று இரவு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

பின்னர்உற்சவ அருள்மிகு பகவதி அம்மன் அலங்கரிக்கப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்ட பின் பஞ்சதீப உட்பட மகா தீபம் காண்பிக்கப்பட்டது பிறகு திருவீதி உலா புறப்பாடு மின்னொழியில் நடைபெற்றது.

அப்போது சண்டி மேளம் முன்னே செல்ல திருவீதி உலா நடைபெற்றது வழி நடத்த பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து வழிபாடு செய்தனர் அப்போது பகவதி அம்மனுக்கு மஞ்சள் நீர் ஊற்றப்பட்டு சுவாமி தரிசனம் நடைபெற்றது.

What do you think?

‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் ஆகுறது சாத்தியமே இல்லை

விஜய் வேணும்னே இந்த விவகாரத்தைப் பெரிசாக்கி பில்டப் கொடுக்குறாரு – சபாநாயகர் அப்பாவு