in

நல்லூர் அருள்மிகு அய்யனார் குதிரை எடுப்பு ஊர்வலம்

நல்லூர் அருள்மிகு அய்யனார் குதிரை எடுப்பு ஊர்வலம்

 

மதுரை சோழவந்தான் அருகே திருவாலவாய நல்லூர்அருள்மிகு அய்யனார் குதிரை எடுப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவாலவாயநல்லூரில் உள்ளஅருள்மிகு ஸ்ரீ சப்பானி என்ற மந்தை கருப்பணசாமி கோவில் ஆடி பதினெட்டாம் பெருக்கு திருவிழா நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு அரிஹர புத்திர அய்யனார் கோவிலில் இருந்து குதிரை எடுத்து கிராமத்தின் முக்கிய வீடுகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது திருவிழா ஏற்பாடுகளை திருவாலவாயநல்லூர் விழா கமிட்டி மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

What do you think?

ஆடி பதினெட்டாம் பெருக்கு புது தாலி மாத்திக்கொண்ட மணமக்கள்

ராஞ்சனா climax மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து … அறிக்கை வெளியிட்ட Dhanush