நல்லியக்கோடன் திருக்கோயில் திருவிளக்கு பூஜை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் திருக்கோயில் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய சாகை வார்த்தல் மற்றும் ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு 108 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

முன்னதாக மூலவர் ஸ்ரீ முத்தாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும் 108 பெண்கள் தங்கள் கொண்டு வந்திருந்த திருவிளக்கை மகாலட்சுமி யாக அலங்கரித்து குங்கும அர்ச்சனை மற்றும் மலர் அர்ச்சனை செய்தனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


