நாகை நவநீதகிருஷ்ணன் கோவில் தேரோட்டம்
கோகுலாஷ்டமியை முன்னிட்டு நாகை நவநீதகிருஷ்ணன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு.
நாகையில் உள்ள பழமை வாய்ந்த நவநீத கிருஷ்ணன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஆண்டுதோறும் நாகை நவநீத கிருஷ்ணன் கோவிலில் தேரோட்டம் நடைபெறும்.
பெருமாள் வடக்கு வீதியில் இருந்து தேரோட்டம் தொடங்கியது. அலங்கரித்து வைக்கப்பட்ட ருக்மணி, சத்தியபாமா சமேத நவநீதகிருஷ்ணர் தேரில் எழுந்தருளினார்.
மங்கல வாத்தியங்கள், செண்டை மேள தாளம் முழங்க பக்தர்கள் கிருஷ்ணா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் தேரை இழுத்து வந்தனர்.
தேர் பெருமாள் கீழவீதி, பெருமாள் தெற்குவீதி, பெருமாள் மேலவீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடைந்தது.

அப்போது பக்தர்கள் அவரவர் இல்ல வாசலில் நின்று கிருஷ்ண பெருமானுக்கு அர்ச்சனை செய்து நவநீதகிருஷ்ணனை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


