பாலியல் குற்றச்சாட்டுல சிக்கியிருக்காரு நதீம் கான்
சமீபத்துல ஹிந்தியில் வெளியாகி உலகளவுல 1000 கோடி ரூபாய்க்கும் மேல வசூல் செஞ்சு சாதனை படைச்ச படம் ‘துரந்தர்’.
இந்தப் படத்துல நடிச்சதன் மூலமா இந்தியா முழுக்க ஃபேமஸானவர் நடிகர் நதீம் கான்.
இப்போ இவரு ஒரு சீரியஸான பாலியல் குற்றச்சாட்டுல சிக்கியிருக்காரு. நதீம் கான் வீட்ல கடந்த 10 வருஷமா ஒரு பெண் வேலை செஞ்சுட்டு வந்திருக்காங்க.
அந்தப் பெண் இப்போ போலீஸ்ல கொடுத்திருக்கிற புகார் ரொம்பவே அதிர்ச்சியா இருக்கு:”உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்”னு ஆசை வார்த்தை சொல்லி, கடந்த 10 வருஷமா நதீம் கான் தன்னை பாலியல் ரீதியா பயன்படுத்திக்கிட்டதா அந்தப் பெண் சொல்லியிருக்காங்க.
ஆரம்பத்துல அவர் சொன்னதை நம்பி அமைதியா இருந்த அந்தப் பெண், சமீபத்துல கல்யாணம் பத்தி கேட்டப்போ அவர் மழுப்பலா பதில் சொல்ல ஆரம்பிச்சிருக்காரு.
அப்போதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவங்க போலீஸ்ல புகார் கொடுத்திருக்காங்க. மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்துல புகார் கொடுத்த உடனே, போலீசார் நதீம் கானை கைது செஞ்சுட்டாங்க.
முதன்முதல்ல இந்தச் சம்பவம் மும்பை மலவானி பகுதியில நடந்ததால, இப்போ இந்த கேஸை மலவானி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாத்தியிருக்காங்க. போலீஸ்காரங்க இப்போ நடிகரோட போன், ஆவணங்கள் எல்லாத்தையும் பறிமுதல் செஞ்சு விசாரணை நடத்திட்டு இருக்காங்க.
துரந்தர்’ படத்தோட மெகா ஹிட்டுக்கு அப்புறம் நதீம் கானுக்கு ஏகப்பட்ட புது பட வாய்ப்புகள் வந்துட்டு இருந்துச்சு. ஆனா இப்போ இந்த மாதிரி ஒரு விஷயத்தால கைதானதுனால, தயாரிப்பாளர்கள் அவர் கூட வேலை செய்யத் தயங்குறாங்க.
இது அவரோட சினிமா வாழ்க்கைக்கு ஒரு பெரிய [end] எண்ட்-கார்டா கூட இருக்கலாம்னு பேசிக்கிறாங்க.


