என் உழைப்பு என்னை கரை சேர்க்கும்
பிரபு சீனிவாஸ் இயக்கியுள்ள அக்யூஸ்ட் படத்தில் கதாநாயகனாக உதயா நடித்துள்ளார் .
உதயாவுடன் அஜ்மல் மற்றும் யோகி பாபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், கன்னட நடிகை ஜான்விகா கதாநாயகியாக நடித்திருகிறார்.
இவர் ஏற்கனவே திருநெல்வேலி, கலகலப்பு, தலைவா உள்ளிட்ட படங்கலில் நடித்திருக்கிறார். தான் சினிமாவில் நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது இத்தனை ஆண்டுகளில் நான் நிறைய சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்து இருக்கிறேன்.
பெரும் சிரமங்களுக்கிடையில் அக்யூஸ்ட் படத்தை நான் தயாரித்து நடித்தும் இருக்கிறேன் நான் நடித்த படத்திலேயே மிகப்பெரிய பட்ஜெட் படம் அக்யூஸ்ட், இந்த படத்துக்காக செய்யப்பட்ட விளம்பரங்கள் படத்தின் மீது எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாகியது.
படத்தின் வியாபாரமும் நல்ல முறையில் போய்க்கொண்டு இருக்கிறது’ விரைவில் ரிலீஸ்’ Date’ அறிவிக்கப்படும்.
நான் சினிமாவிலிருந்து ஒரு கட்டத்தில் விலகிவிடலாம் என்று நினைத்தேன் ஆனால் என் நம்பிக்கையும் தொழில் மேல் வைத்த பக்தியும் என்னை கைவிடவில்லை என் உழைப்பு என்னை கரை சேர்க்கும் என்று நம்புகிறேன் என்று உதயா கூறியுள்ளார்.


