in

திண்டிவனத்தில் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

திண்டிவனத்தில் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

 

திண்டிவனத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை- ஒருவரையொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இஸ்லாமியர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈகை திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பல்வேறு இடங்களிலும் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர்.

திண்டிவனம் மயிலம் ரோட்டில் உள்ள வக்பு வாரிய மைதானத்தில் 3000க்கும் மேற்பட்ட ஆண்கள் ஒன்று திரண்டு சிறப்பு தொழுகை நடத்தினர்.

அப்போது சிறுவர், சிறுமிகள், ஆண்கள், என அனைவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதேப்போல் மயிலம், கோட்டக்குப்பம், திண்டிவனம், உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு பக்ரீத் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

What do you think?

வடலூரில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை மற்றும் பேரணி 

தீவனூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலய பிரம்மோற்சவம்