பரமக்குடியில் உள்ள முத்தால பரமேஸ்வரி அம்மன் கோவில் விழாவில் இஸ்லாமிய இளைஞர்கள் பங்கேற்பு.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள முத்தால பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பரமக்குடி எமனேஸ்வரம் தங்கம்மாள்.
ரஹீம் அறக்கட்டளை மற்றும் வளர்பிறை அறக்கட்டளை சார்பில் இஸ்லாமிய இளைஞர்கள் பூத்தட்டுகளை கைகளில் ஏந்தி பரமக்குடி நகர் வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலில் அம்மனை தரிசித்தனர்.
கோயில் நிர்வாகத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு மத நல்லிணக்கத்தின் அழகிய சின்னமாக அமைந்ததாக பொதுமக்கள் பாராட்டினர்.
பரமக்குடியில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் இந்த நிகழ்ச்சியை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
குறிப்பாக, கடந்த ஆண்டும் பரமக்குடி எமனேஸ்வரம் தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை சார்பில் இதுபோன்ற மத நல்லிணக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


