வைரவன் கோவில் கிராமத்தில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி பெருவிழா
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது வைரவன் கோவில் கிராமம் இங்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பசும்பால் தினமும் கொண்டு செல்வதாகவும் ஒரு இடத்தில் மட்டும் தினம் தினம் கால் இரடி விட்டுக்கொண்டே இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் அந்த இடத்தில் கூனி அம்மனின் சிலை கண்டெடுக்கப்பட்டது மட்டுமின்றி அருகாமையில் பைரவரின் சிலையும் ஒன்று கண்டெடுக்கப்பட்டதால் அந்த கிராமத்திற்கு வைரவன் கோவில் என பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது.
அதே சமயம் ராமநாதபுரம் மாவட்டத்திலேயே இந்த கிராம மக்கள் தான் முளைப்பாரி திருவிழாவை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல கூனியம்மன் ஆலயம் முன்பு அமைந்துள்ள குளம் கப்பக்கண்ணி குளம் எனவும் இங்குதான் அகஸ்தியர் தவம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்கும் முன்பாக தோன்றிய பழமை வாய்ந்த ஆலயமாகும் இந்த கூனி அம்மன் ஆலயம் இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால்குடம், கரகம், காவடி, அக்னி சட்டி,அழகு குத்துதல், மாவிளக்கு, கரும்பால் தொட்டி, முடி காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கட்டனங்களை செலுத்துவதோடு விரதம் இருந்த பக்தர்கள் நவதானியங்களால் வளர்க்கப்பட்ட முளைப்பாறியை அப்பகுதியைச் சேர்ந்த சுற்றுவட்டார பக்தர்கள் தலையில் சுமந்தவாறு வந்து அம்மனிடம் சமர்ப்பித்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நீர்நிலைகளை கரைத்து தங்களது நேத்து கடனை செலுத்தினர்.
முன்னதாக கூனி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது பின்னர் மலர் மாலைகளுடன் விசேஷ அலங்காரத்தில் காட்சியளித்த கூனி அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
இதனை பக்தர்கள் பலரும் மனம் உருகி வழிபாடு செய்தனர் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவையுடன் கூடிய அன்னதானமும் வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாட்டினை வைரவன் கோவில் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோவிந்தன் கூறியதாவது.