சிறுநீரகம் தானம் கொடுத்து மகளின் உயிரை காப்பாற்றிய தாய்
தஞ்சையில் சிறுநீரகம் தானம் கொடுத்து மகளின் உயிரை காப்பாற்றி இருக்கிறார் தாய் ஒருவர்.
தஞ்சையில் வசித்து வருபவர்கள் சரவணன். செளம்யா தம்பதியினர்.
35 வயதான செளமியாவிற்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு பேச முடியாமல், நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.:
டயாலிஸ் செய்யப்பட்டு வந்தாலும், சிறுநீரகம் மாற்றம் மட்டுமே தீரந்தர தீர்வு ஏற்படும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதனை அறிந்த செளம்யாவின் 54 வயதான தாய் காஞ்சனா தனது சிறுநீரகத்தை எடுத்து என் மகளுக்கு பொருத்தி அவள் உயிரை காப்பாற்றுங்கள் என மருத்துவர்களிடம் கூறினார்.
இதனை அடுத்து தஞ்சை காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சிறுநீரகத் துறை மருத்துவக்குழுவினர் இணைந்து தாய் காஞ்சனாவின் சிறுநீரகத்தை எடுத்து அவரது மகள் செளம்யாவிற்கு பொருத்தி அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
தற்போது தானம் வழங்கிய தாயும், தானம் பெற்ற மகளும் நலமுடன் உள்ளனர்.


