மார்கன்… மார்கமான Action Thriller….
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனிக்கு சுவாரஸ்யமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் தனி திறமை உண்டு.
இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக அவரது தேர்வுகள் சரிவை கொடுத்தாலும். ‘மார்கன்’ மூலம் மீண்டும் மார்கட்..டை பிடித்துவிடுவார் என்று நம்பலாம்.
Action Thriller ...ரான மார்கன் ….. Vijay Antony…யின் வலுவான நடிப்பு மற்றும் தனித்துவமான கதைக்களத்துடன், அஜய் திஷன் சமுத்திரக்கனி, பிரகிடா ஆகியோர் நடித்த மார்கன் ரசிகர்களை ஈர்த்தா பார்போம்.
மும்பையின் ஏடிஜிபி துருவ் (விஜய் ஆண்டனி), தொடர் கொலையாளியால் பலியாகும் தனது மகளின் இழப்பால் நோருங்கிபோகிறார். சென்னையில் இதே போன்ற மற்றொரு கொலை குறித்து அவருக்குத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வழக்குகளுக்கும் இடையிலான ஒரு தொடர்பு என்னவென்றால், கொலையாளி ஒருவரின் உடலை கருப்பாக்கும் ஒரு மருந்தை செலுத்தியதாகத் தெரிகிறது.
கொலையை விசாரிக்க மும்பை..யில் இருந்து சென்னைக்கு வர நினைக்கிறார் துருவ். இருப்பினும், அவரது மகளின் இழப்பிலிருந்து அவர் மீண்டு வரமுடியாததால் மேலதிகாரிகள் அவரை அனுமதிக்கவில்லை.
கொலையை விசாரிக்க அவர் Unofficial…லாக சென்னைக்கு வரும்போது, காவல்துறை அதிகாரிகள், தடயங்கள் மற்றும் கைரேகைகளை ஆராய்ந்த பார்க்கும்போது, நீச்சல் வீரர் தமிழறிவு (அஜய் திஷன்) மீது தங்கள் சந்தேகம் இருபதாக சொல்கிறார்கள். கொலையாளியைக் கைது செய்ய முயற்சிக்கும்போது விஜய் Antony…இக்கு மருந்து செலுத்தப்பட்டு அவரது இடது பக்கம் கருப்பாகிவிடுகிறது.
ஆரம்பத்தில் சந்தேகப்படும்படியாக இருந்த தமிழறிவின் செயல்கள் காவல்துறையினரை சரியான பாதையில் இட்டுச் செல்கின்றனவா?. கொலையாளி யார்? அவர்கள் ஏன் சருமத்தை கருமையாக்கும் மருந்தைப் பயன்படுத்துகிறார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? இரண்டு மணி நேரம் 12 நிமிடங்கள் இந்த கேள்விக்கு எல்லாம் Thrilling..ஆன பதிலளிக்கிறது மார்கன்.
இயக்குனர் லியோ ஜான் பாலின் ‘மார்கன்’ கதையை கொண்டு என்ற விதம் நேரத்தை வீணாக்கவில்லை. முதல் சட்டகத்திலிருந்தே வழக்கை ஆழமாகச் கொண்டு செல்கிறார் பண்டைய முனிவர்களை உள்ளடக்கிய இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளைக் கொண்ட Crime Thriller மார்கன்.
ஒரு விசித்திரமான த்ரில்லரை இந்த படத்தில் பார்க்கலாம். கொலையாளியிடம் இருந்து ஊகிக்க முடியாதா வகையில் அகிம்சை முறையில் குற்றத்தை ஒப்பு கொள்ள வைத்த விதம் அருமை.
இயக்குனர் லியோ ஜான் பால் இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளை சொல்லி இருப்பதால் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நம்பத்தகுந்ததாக இல்லை. கடைசி 20 நிமிடங்களில் கொலையாளி வெளிப்படுகிறார்.
மேலும் இந்த படம் ஒரு முக்கியமான செய்தியைப் சொல்லுகிறது. இளைஞர்கள் மத்தியில் தற்போதுள்ள மோகத்தை வலியுறுத்தியுள்ளது. காவல் அதிகாரி துருவ்வாக விஜய் ஆண்டனி தனது பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
அமானுஷ்ய மற்றும் சிறந்த நினைவாற்றல் கொண்ட ஒரு மனிதராக நடித்த அறிமுக வில்லன் அஜய் திஷனும் சிறப்பாக நடித்திருக்கிறார். அஜய்யின் அறிவு துருவ் விசாரணையை வழிநடத்த உதவும் விதம் ‘மார்கனை’ ஓரளவு சுவாரஸ்யமாக்குகிறது.
ஸ்கிரிப்ட் செய்ய முடியாத சஸ்பென்ஸை விஜய் ஆண்டனியின் இசை உருவாக்கியத்தில் கதைக்கு வெயிட்age கொடுத்திருகிறது . படம் கிளைமாக்ஸ்…சை நோக்கி நகரும்போது, பதற்றத்தைத் அதிகரித்து, பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது.
தமிழ் சினிமாவில் கிரைம் த்ரில்லர் படங்களின் அலை அடிக்க தொடங்கி இருக்கும் நிலையில், விஜய் ஆண்டனி மார்கன் மறக்க முடியாத த்ரில்லர் Movie.