50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அமர்ந்து வேலை நிறுத்த போராட்டம்
தேனி நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளராக பொறுப்பேற்க வந்தவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அலுவலகம் நுழைவாயில் முன்பு 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அமர்ந்து வேலை நிறுத்த போராட்டம்
ஊழல் புகாருக்கு ஆளான மண்டல மேலாளருக்கு மீண்டும் தேனியில் மண்டல மேலாளராக நியமித்ததால் பணியாளர்கள் அதிருப்தி
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தேனி மாவட்ட கிடங்கின் மண்டல மேலாளராக பணியாற்றி வந்த செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தேனி மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மண்டல் மேலாளராக பொறுப்பேற்பதற்காக வருகை தர இருந்த செந்தில்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்ட நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் தலைமை அலுவலகத்தின் நுழைவாயில் முன்பு சுமை தூக்கும் தொழிலாளர்கள், பணியாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்
தேனி மாவட்ட மண்டல மேலாளராக நியமிக்கப்பட்ட செந்தில்குமார் நியமனத்தை “ரத்து செய்” “ரத்து செய்” என கோஷங்களை எழுப்பி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் கூறுகையில்2022 முதல் 2025ஆம் ஆண்டு வரை தேனி மாவட்டத்தில் மண்டல மேலாளராக செந்தில்குமார் பணியாற்றி காலத்தில் மாவட்ட கிடங்கில் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் செய்து பணியாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும்.
தரம் இல்லாத அரிசிகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய பணியாளர்களை வற்புறுத்துவதாகும் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பணியாளர் பணியில் இருந்து நீக்கம் செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்தார்.
இதனால் பொதுமக்களுக்கு தரம் இல்லாத அரிசிகளை வினியோகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே மண்டல மேலாளராக செந்தில்குமார் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்


