in

2.77 கோடியில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க பூமி பூஜை

2.77 கோடியில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க பூமி பூஜை

 

பல்வேறு கிராம மக்களின் கோரிக்கை நிறைவேறியதால் மகிழ்ச்சியில் பொதுமக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காரப்பட்டு பகுதியில் காரப்பட்டு-மட்டவெட்டு கிராமங்களை இணைக்க செய்யாற்றின் கிளையாற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க எம்.எல்.ஏ சரவணன் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.

சுமார் 2.77 கோடியில் கட்டப்பட உள்ள இந்த உயர் மட்டும் மேம்பாலத்தினால் மட்ட வெட்டு, மேல் குப்பம, கீழ்குப்பம், அடிவாரம், சாமலை, அத்திமரான் கொட்டாய், மேல்பாலூர் மற்றும் கீழ்பாலூர் உள்ளிட்ட பத்திர்க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடையவர்கள்.

மேலும் ஜவ்வாது மலையில் இருந்து அடிவாரம் வழியாக செய்யாற்றில் கலக்கும் கோரையாற்றின் குறுக்கே இந்த புதிய ஒயர் மட்ட மேம்பாலம் அமைய உள்ளதால் மழைக்காலங்களில் இப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களுக்கும் ஆளாகி வந்தனர்.

மற்றும் பள்ளி மாணவர்களும் அவசர சேவைக்கு மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்களும் மழைக்காலங்களில் இப்பகுதியில் தரைபாளையத்திற்கு மேல் தண்ணீர் சென்றதால் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர் சில சமயங்களில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களும் உண்டு.

அதனை கருத்தில் கொண்டு தற்போதைய கலசப்பாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் இப்பகுதியில் புதிதாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று முயற்சி செய்து இன்று பூமி பூஜை செய்து அதற்கான பணியினை துவக்கி வைத்தார்.சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்கு அப்பகுதி மக்கள் பெரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் சுந்தரபாண்டியன்,ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி லட்சுமணன்,திமுக கிளைச் செயலாளர் லட்சுமணன் என்கின்ற சீனு அரசு அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What do you think?

அண்ணாமலையார் மலை மீது ஏற்பட்ட மகா தீப தரிசனம் நிறைவு…..

ஸ்ரீ ராஜராஜேஸ்வரருக்கு மகா தீபாரதனை பஞ்சமுக தீபாராதனை கற்பூர ஆர்த்தி