in

அரசு கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை அமைச்சர் கோவி. செழியன்

அரசு கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை அமைச்சர் கோவி. செழியன்

 

அரசு கல்லூரிகளில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு கூடுதலாக 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது… உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்..

தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு 300 க்கும் மேற்படிட மாணவ , மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டி பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன்…

அரசு கல்லூரிகளில் நிகழாண்டு கூடுதல் மாணவர் சேர்க்கைக்கான வழிவகைகளைத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு கூடுதலாக 25 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர் சேர்க்கைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதிகமான விண்ணப்பங்கள் வரும் நிலையில், குறைவான மாணவர் சேர்க்கை நடைபெற்று, மீதமுள்ள விண்ணப்பங்களுக்குரிய மாணவர்கள் பிற கல்லூரிகளைத் தேடிப் படித்து வந்தனர். இதனால், தமிழக முதல்வரின் அறிவுரைப்படி அதே கல்லூரியில் சுழற்சி என்ற நிலையில் அதே பாடப் பிரிவுகளை உருவாக்கித் தந்துள்ளார்.

அந்த வகையில் நிகழாண்டு 64 கல்லூரிகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி அதிகமான மாணவர் சேர்க்கைக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழில்நுட்ப இயக்ககத்திலும், உயர் கல்வித் துறையிலும் தனித்தனியாக 11 பாடப் பிரிவுகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்த விண்ணப்பங்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் வேண்டுகோளுக்கிணங்க கூடுதலாக 5 சதவீதம், 10 சதவீதம் மாணவர் சேர்க்கை வழங்கப்படும். எனவே, அரசு கல்லூரிகளில் அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் பயில்வதற்கான வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளோம்.

இடைநிற்றல் கூடாது என்ற தத்துவத்தின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் உயர் கல்வித் துறை செய்து வருகிறது.

எனவே, நம் நாட்டில் முதலிடத்தில் நமது உயர் கல்வித் துறை இருக்கிறது என்ற சாதனை, மாணவர் சேர்க்கையிலும் எட்டுவதற்கான முழு முயற்சியை உயர் கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.

அதற்கான அனைத்து ஆக்கத்தையும், ஊக்கத்தையும் வழங்கி வரும் தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் அமைச்சர்.

இவ்விழாவுக்கு மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் செயலர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மருதுபாண்டியன் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் சிறப்புரையாற்றி 340 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். இவர்களில் 10 பேர் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநர் பழனிமுத்து , மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ரோசி, கல்வியாளர் சிபி குமரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்..

What do you think?

ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்டார் எடப்பாடி பழனிச்சாமி

திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனை