திருவாவடுதுறை ஆதின குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்தியின் மகரத் தலைநாள் குருபூஜை விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ளது திருவாவடுதுறை ஆதினம்.திருவாவடுதுறை ஆதின குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்தியின் மகர தலைநாள் குரு பூஜை விழாவையொட்டி ஆதினத்திற்கு சொந்தமான நமச்சிவாய மூர்த்திகள் மழலையர் தொடக்கப்பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஆதின 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.கும்பகோணம் கிராண்ட் ரோட்டரி சங்கம் மற்றும் மல்லார்பேட்டை ரோட்டரி சமுதாய குழுமம் இணைத்து நடத்திய .

இந்த மருத்துவ முகாமில் தோல் நகம் முடி சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர்,நீரிழிவு நோய் பொது மருத்துவர்,பல் மருத்துவ சிகிச்சைநிபுணர்,சிறுநீரக கல் மற்றும் தொற்று நோய்கள் சிகிச்சை நிபுணர், குழந்தைகள் பொது மருத்துவர்,காது மூக்கு தொண்டை நோய் சிகிச்சை நிபுணர்,குடல் இறப்பை பித்தப்பை சிகிச்சை நிபுணர்,உள்ளிட்ட
பொது நோய்க்கான சிகிச்சைகளுக்கு சிறந்த மருத்துவர்களை கொண்டு சிகிச்சை வழங்கப்பட்டு .
மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.இந்த மருத்துவ முகாமில் 300 -க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுச் சென்றனர் மேலும் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த செல்வசுந்தரி என்பவரின் வீடு எரிந்ததற்கு குருமகா சன்னிதானம் ரூ 5000 ரொக்கம் தொகையை நிவாரணமாக வழங்கினார்.


