in

மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆனி மாத கிருத்திகை

மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆனி மாத கிருத்திகை

 

மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வண்ண மலர்களால் அங்கரிக்கப்பட்டு தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தொடர்ந்து மகாதிபாரதனை கும்ப தீபம் நட்சத்திர தீபம் சத்திரங்கள் பாடசாலை உபச்சாரம் சோடச உபச்சாரம் மற்றும் பஞ்சமுக தீபாராதனை கற்பூரத்தை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து உட்பிரகாரம் வந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. மேலும் ஊஞ்சலில் காட்சியளித்த ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணி சுவாமிக்கு பஞ்சமுக கற்பூர ஆரத்தி மற்றும் கும்ப தீபம்,கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

சாலையை சீரமைக்க கோரி 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

லட்டு பிரசாத டோக்கன் வழங்க திருமலையில் உள்ள லட்டு கவுண்டரில் இயந்திரம் ஏற்பாடு.