இளம் ராமானுஜரை கண்டறியும் கணிதப் போட்டி
தஞ்சாவூரில் இளம் ராமானுஜரை கண்டறியும் கணிதப் போட்டி, வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி பரிசுக் கோப்பையை வழங்கி பாராட்டு
செல்பேசியை மாணவர்கள் பயனுள்ள வகையில் பயன்படும் விதமாக மதுரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரைனி பாப்ஸ் இன்டர்நேஷனல் அபாகஸ் என்ற கல்வி நிறுவனம், உலகளாவிய அளவில் 21 நாடுகளில் உள்ள அவர்களின் மாணவர்கள் பங்குபெற்ற இளம் ராமானுஜரை கண்டறிதல் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக கணிதப் போட்டியை நடத்தின, .
இந்த போட்டிகளில் தஞ்சை மாவட்டத்தில் 37 பேர் வெற்றி பெற்றனர், இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கோப்பைகள் மற்றும் பதக்கங்களை தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி அவர்கள் வழங்கி வாழ்த்தினார், அப்போது மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும் உண்மையாகவும் வாழ வேண்டும், துரித உணவுகளை மாணவர்கள் உட்கொள்ளக்கூடாது, செல்பேசியை பயன்படுத்த கூடாது என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பிரைனி பாப்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஜெயப்பிரியா தலைமை நிர்வாக அதிகாரி ஜோதிபாசு உள்ளிட்ட வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்


