மாசி மக தேர் திருவிழா – 6-ம் நாள் சோமேஸ்வரர் யானை வாகனத்திலும், லட்சுமி நாரயணபெருமாள் யானைவாகனம் திருவீதி உலா
நாமக்கல் மாவட்டம்சேந்தமங்கலம் லட்சுமி பெருமாள் மற்றும் சவுந்தரவள்ளி அம்பாள் சமேத சோமேஸ்வரர் கோவில்களில், மாசி திருவிழா கடந்த 22ந்தேதிகொடியேற்றத் துடன் தொடங்கியது.
தொடர்ந்து, சோமேஸ்வரரும் பெருமாளும்12 நாள் திருவிழாவில், தினமும் இரவு, 8:00 மணிக்கு கேளிக்கை மண்டபத்தில் சோமேஸ் வரர், லட்சுமி நாரயண பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடக்கிறது.
நேற்று இரவு 6-ம் -நாள் சோமேஸ்வரர் யானைவாகனத்திலும் லட்சுமி நாரயண பெருமாள் யானை வாகனத்திலும் எழுந்தருளினார் அப்போது தீப தூப உபசரிப்புகள் காண்பிக்கப்பட்டது பின்னர் புறப்பாடு மிக விமர்சையாக நடைபெற்றது வழி நெடுக பக்தர்கள் வழிபாடு செய்தனர்
இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பெருமாள் திருக்கல்யாணம், வரும் பிப்ரவரி28 சனிக்கிழமையும், சோமேஸ்வரர் திருக்கல்யாணம், மார்ச், 1 ஞாயிற்று கிழமையும் நடக்கிறது. அதை தொடர்ந்து, இரவு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வாண வேடிக்கை நடைபெறும்.
மார்ச், 2ல் பெருமாள் திருத்தேரில் எழுந்த ருளி பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தல், 4ல், சோமேஸ்வரர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து நடைபெற உள்ளது. 6ல், இழுத்தல் ஆகியவ திருவிழா நிறைவு டைகிறது.

