ThugLife தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்தினம்
புகழ்பெற்ற தமிழ் நடிகர்- கமல்ஹாசன் மற்றும் மணிரத்னத்தின் பான்-இந்தியா Movie ..யான தக் லைஃப் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியியானது.
நாயகனுக்குப் பிறகு கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு மணி மற்றும் கமல் மீண்டும் இணைந்ததால், ரசிகர்கள் தக் லைஃப் படத்தின் முலம் ஒரு கிளாசிக் படத்தை எதிர்பார்த்தனர்.
இருப்பினும், இந்த காம்போ… ரசிகர்களை ஏமாற்றி தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.. தக் லைஃப் வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மணிரத்னம் தனது படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்து பேசினார். சமீபத்திய ஒரு நேர்காணலில், ரசிகர்கள் தக் லைஃப் மூலம் வித்தியாசமான ஒன்றை எதிர்பார்த்தனர்.
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். “எங்கள் இருவரிடமிருந்தும் இன்னொரு நாயகனை எதிர்பார்த்தவர்களுக்கு, நான் சொல்லக்கூடியது என்னவென்றால், மன்னித்து விடுங்கள்.
நாங்கள் முற்றிலும் மாறுபட்ட ஒன்றைச் செய்ய விரும்பினோம். Over எதிர்பார்ப்பை விட, வேறுவிதமான எதிர்பார்ப்பு என்று நான் நினைக்கிறேன். ”
ஒரு தோல்விக்குப் பிறகு ஒரு பிளாக்பஸ்டர் படத்துடன் மீண்டு வருவதில் எப்போதும் பெயர் பெற்ற மணிரத்னம், தக் லைஃப் படத்தை விட்டுவிட்டு தனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட்டை தொடங்கிவிட்டார்.


