78…ஆவது கேன்ஸ் விழாவிற்கு தேர்வான ‘மாண்பூமிகு பறை
78…ஆவது கேன்ஸ் திரைப்பட விழா மே 13 ஆம் தேதி தொடங்கி மே 24 ஆம் தேதி முடிவடைகிறது.
78வது கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் தலைவராக பிரெஞ்சு நடிகை ஜூலியட் பினோச் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடுவர் மன்றத் தலைவரான கிரெட்டா கெர்விக்கிற்குப் பிறகு அவர் பொறுப்பேற்றுள்ளார், இதன் மூலம் ஒரு பெண் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த மதிப்புமிக்க பதவியை வகிக்கிறார்.
இந்த விழாவில் “மாண்பூமிகு பறை” என்ற தமிழ் படம் தேர்வு குழுவினரால் தேர்ந்தெடுக்க பட்டு திரையிடபடவுள்ளது.
“மாண்பூமிகு பறை” என்ற தமிழ் திரைப்படம் 78வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. படத்தின் எடிட்டர் சி.எஸ். பிரேம்குமார், இன்ஸ்டாகிராமில் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தப் படத்தை சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கியுள்ளார். “நான் எடிட் செய்த “மாண்பூமிகு பறை” திரைப்படம் 78வது திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இந்த அற்புதமான பயணத்திற்கும் இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி.” என்று படத்தின் எடிட்டர் பிரேம் குமார் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இப்படத்தில், கதாநாயகனாக திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ளார். காயத்ரி ரெமா நாயகியாக நடித்துள்ளார். பறை இசையின் பின்னணி, வலி, பெருமையைச் சொல்லும் படைப்பு மாண்புமிகு பறை.