மயிலம் ஸ்ரீ முருகன் கோயில் பங்குனி உத்திர விழா
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திண்டிவனம் வட்டம் மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திர விழா கடந்த 23ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து நேற்று மாலை ஸ்ரீ விநாயகர் மற்றும் வீரபாகு வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து உற்சவமூர்த்திகள் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தங்க கவசத்தில் காசு மாலைகளுடன் அலங்காரம் செய்யப்பட்டு மகாதிபாரதனை கும்பதீபம் நட்சத்திர தீபம் சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரம், மற்றும் பஞ்சமுக தீபாரதனை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து கோயில் உட்பிரகாரம் வலம் வந்து வெள்ளி பூத வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து வெள்ளி பூத வாகனத்தில் மலையை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பங்குனி உத்தர விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வருகின்ற 31 ஆம் தேதி காலை 5.45 மணியளவில் நடைபெற உள்ளது.


