மஹா மாரியம்மன் குருத்தோலை சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா
குத்தாலத்தில் கொட்டும் மழையில் மஹா மாரியம்மன் குருத்தோலை சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா திரளான பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மிகவும் பழமை வாய்ந்த மஹா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா கடந்த ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும்.
தினம்தோறும் இரவு அம்மன் வீதயுலா காட்சி நடைபெற்று வருகிறது.
ஐந்தாம் நாளான இன்று தெருவடைச்சான் எனப்படும் குருத்தோலை சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் மகா மாரியம்மன் எழுந்தருளி பின்னர் பக்தர்கள் சகோபுரத்தை வடம் பிடித்து இழுத்தனர்.
தொடர்ந்து சகோபுரம் நான்கு மாட வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து அம்மனை வழிபட்டனர்.

இதில் திரளான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தவாறு கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இந்த ஆலயத்தில் வருகின்ற 15 ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


